விஜய் சேதுபதி..
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தெலுங்கில் வில்லனாக அறிமுகமான படம் உப்பென்னா.
இப்படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாகவும் மிரட்டி இருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது.
இதை அறிந்த விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
ஏனென்றால், தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிப்பதை அவருக்கு விரும்பவில்லை என கூறுகின்றனர்.
இதையடுத்து வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.