ஷாருக்கான்..
சில படங்களை மட்டுமே இயக்கி பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் அட்லீ. ராஜா ராணி என்ற அவரது முதல் படமே பெரிய அளவில் ரீச் ஆனது.
அப்பட வெற்றியை தொடர்ந்து தளபதியை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அவரை வைத்து 3 படங்கள் இயக்கி விட்டார்.
அடுத்த படத்திலேயே அட்லீக்கு பாலிவுட் நாயகன் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இப்படத்திற்கான தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகிய வண்ணம் உள்ளது.
படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் பூனேவில் தொடங்கியுள்ளது,
படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கான்-நயன்தாரா இருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
தற்போது என்ன தகவல் என்றால் இந்த புதிய படத்தில் ஸ்பெஷல் ரோலில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.