பிரம்மாண்டமாக வெளியானது ரஜினியின் அண்ணாத்த பட ஃபஸ்ட் லுக்..!

422

அண்ணாத்த ஃபஸ்ட் லுக்..

அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்கள் இயக்கி ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்தவர் இயக்குனர் சிவா.

விஸ்வாசம் படத்தை முடித்த கையோடு அவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, படப்பிடிப்பையும் விரைவிலேயே தொடங்கிவிட்டார். ஆனால் இடையில் கொரோனா பிரச்சனைகள் வர படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.

சென்னை, ஹைதராபாத் என படப்பிடிப்பு மாற்றி மாற்றி நடந்து வருகிறது. நேற்று அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என சூப்பர் செய்தி வெளியிட்டார்கள்.

அதன்படி ரஜினியின் அண்ணாத்த பட ஃபஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகிவிட்டது.