தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸி. அவர் தற்போது ஹிந்தி சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக உள்ளார். அதனால் தமிழ் பக்கம் வருவதில்லை.
தற்போது அவர் குடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த அட்ரோஸிட்டி பற்றிய செய்தி வெளிவந்துள்ளது. நடிகர் விக்கி கௌஷல் உடன் சேர்ந்த டாப்ஸி நடித்த Manmarziyaan படத்தின் ஷூட்டிங் முடிந்து wrap-up பார்ட்டி நடந்துள்ளது. அதில் குடித்த டாப்ஸி க்கு போதை அதிகமாகி அந்த ஹோட்டலின் கார்டன் பகுதியிலேயே படுத்துவிட்டாராம்.
“இன்று இரவு இங்கு தான் தூங்க போகிறேன்” என கூறி கலாட்டா செய்துள்ளார். ஹீரோ விக்கி கௌஷல் எவ்வளவு சொல்லியும் டாப்ஸி கேட்கவில்லையாம். பின்னர் எப்படியோ சமாளித்து ஹோட்டல் அறைக்கு டாப்ஸியை அனுப்பி வைத்துள்ளனர்.