பலரையும் கவர்ந்த காமெடி நடிகருக்கு வாழ்வில் இப்படி ஒரு கஷ்டமாம் : மனதை வலிக்க செய்த சோகம்!!

899

காமெடி நடிகருக்கு மனதை வலிக்க செய்த சோகம்..

அழகர்சாமியின் குதிரை படத்தின் மூலம் பலரையும் திரும்பி பார்க்கவைத்தவர் அப்புக்குட்டி. வீரம் படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார். அஜித்தே இவரை போட்டோ ஷூட் எடுத்திருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புக்குட்டியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் வாழ்க விவசாயி.

அறிமுக இயக்குனர் பொன்னி மோகன் எடுத்திருக்கும் இப்படத்தின் அப்புகுட்டிக்கு ஜோடியாக வசுந்த்ரா நடித்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய அப்புக்குட்டி இயக்குனர் என்னிடம் படத்தின் கதை சொல்லும் போது என் அம்மாவை நேரில் பார்த்தது போல இருந்தது.

எனக்கு விவசாய நிலம் கிடையாது. என் பெற்றோர்கள் விவசாய கூலித்தொழிலாளிகள். விவசாயம் செய்ய சொந்தமாக நிலம் இல்லை. இருந்திருந்தால் ஆடு, மாடு மேய்த்திருப்பேன். எனக்கு ஒருவேளை சோறு போட கூட என் அம்மாவால் முடியவில்லை. பின் நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என யோசித்த பின் சென்னைக்கு வந்துவிட்டேன்.

விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் கஷ்டத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக நான் இந்த கதையை ஓகே சொல்லிவிட்டேன். என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? என்னை ஏற்றுக்கொள்ளக்கூடாதா? என மேடையில் பேசியது மனதை மிகவும் வலிக்கச்செய்துள்ளது.