மோசமாக சண்டை போட்ட கஸ்தூரி-வனிதா : வெளியில் வந்த பிறகும் இப்படியா?

906

மோசமாக சண்டை போட்ட கஸ்தூரி-வனிதா!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கஸ்தூரி மற்றும் வனிதா இடையே அதிக அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதனால் அவர்கள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் இருவரும் ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் தற்போது இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ளனர்.

கவின் விஷயம் பற்றி வனிதா கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி பேசிய கஸ்தூரி ஒரு ட்விட் போட்டார். அதில் வாத்து குறியீடையும் பயன்படுத்தியிருந்தார்.

“என்னதான் #losliya வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாக பழி போடுவது? விட்டுருங்கம்மா!” என்று கஸ்தூரி ட்விட் செய்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த வனிதா, “பலரும் உங்களுக்கு பதிலடி கொடுங்கள் என கூறுகிறார்கள். உங்களுக்கு தகுந்த எமோஜி எதுவுமே இல்லையே” என கூறினார். இப்படியே சண்டை நீண்டு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.