விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை மிகவும் அழகாக கொண்டாடிய காதலி நயன்தாரா..!

399

விக்னேஷ் சிவனின்..

திரையுலகில் தற்போது நெருக்கமாக காதலித்து வரும் ஜோடிகளில், பிரபலமானவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் நடக்கும் என்று நயன்தாராவே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும் தற்போது தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் இன்று இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் என்பதால், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை மிகவும் அழகாக கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.