மகள் வயது பெண்ணை மணமுடித்த பாலுமகேந்திரா..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் திகழ்ந்தவர் பாலுமகேந்திரா.இவர் கடந்த 1939ஆம் ஆண்டு இலங்கையின் மட்டக்களப்பில் பிறந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பாலுமகேந்திரா தனது 74வது வயதில் உயிரிழந்தார்.
பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்க்கை பல மேடு பள்ளங்கள் நிறைந்தது.இவருக்கு அகிலா, நடிகை ஷோபா மற்றும் நடிகை மெளனிகா என மூன்று மனைவிகள் இருந்தனர்.தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா.
அகிலா
அகிலா குறித்து பாலுமகேந்திரா முன்னர் கூறுகையில், எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் 18 வயது. சரியாகப் புடவை கட்டக்கூடத் தெரியாத வெகுளிப்பெண். அகிலாவைப் போன்ற பத்தினிப் பெண்கள் புராணகாலத்தில் தான் இருந்திருக்கிறார்கள். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா.
என்னைப் போன்ற ஒரு பித்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அல்ல. கனவுகளைத் துரத்தியபடி சதா ஓடிக்கொண்டு இருக்கும் நாடோடி நான். எனக்கு மனைவியாக வந்தது தான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.
மெளனிகாவுடனான என் உறவை நான் ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்க வேண்டும். இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும், என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை என கூறினார்.
ஷோபா
நடிகை ஷோபாவை பாலுமகேந்திரா திருமணம் செய்து கொண்டாலும் அவரை பற்றி சில இடங்களில் மட்டுமே பேசினார்.ஷோபா தனது 17 வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் குறித்த நினைவலைகளை முன்னர் பகிர்ந்த பாலுமகேந்திரா, தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது? அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகையாவார்.
ஷோபா என்ற அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தை எப்படி சொல்வேன் என கூறியிருந்தார்.
நடிகை மெளனிகா
நடிகை மெளனிகாவை பாலுமகேந்திரா கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இறுதிவரை அவருடன் வாழ்ந்தார். பாலுமகேந்திராவை விட மெளனிகாவுக்கு 30 வயது குறைவாகும்.
பாலு மகேந்திரா இறந்த நிலையில் , மௌனிகா வந்து பாலு மகேந்திராவின் உடலைப் பார்க்கக் கூடாது என்று அப்போது சிலர் சண்டை போட்டது பலரும் தெரிந்திருக்கும்.
கணவர் உடலை காண கதறி அழுத மெளனிகா இறுதி ஊர்வலம் கிளம்புவதற்கு முன்பு கண்ணீரில் கரைந்தபடி வந்து, இரண்டு நிமிடம் பாலு மகேந்திராவின் உடலைப் பார்த்து விட்டு நடைப்பிணமாக வெளியேறினார்.
மெளனிகா குறித்து பாலுமகேந்திரா கூறுகையில், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா (பாலுமகேந்திராவின் முதல் மனைவி ) எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது என மெளனிகா கூறினாள்.
ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாகவேண்டும் என்ற ஆசையைக் கூடத் தவிர்த்தவள் அவள் என கூறினார்.