ஜெயலலிதா பயோபிக்
ஜெயலலிதா நடிக்க உள்ள தலைவி படத்தில் அரவிந்த் சாமி இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப், படமாகப் பல இயக்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால் அதைச் சரியாக ஏ.எல்.விஜய் மட்டுமே செயல்படுத்தி வருகிறார்.
தலைவி’ என்ற பெயரிட்டுள்ள இதில் ஜெயலலிதாவாகப் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் லுக்குகாக கங்கனா அமெரிக்க சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும் கங்கனா அந்த படத்திற்காக எடுக்கும் முயற்சியை அனைவரும் பாராட்டினர்.
இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதில் எம்ஜிஆரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆதலால் அதில் யாரு நடிப்பார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கனா தற்போது ஜெயலலிதாவின் உடல் மொழி, பேச்சு போன்றவற்றைத் தெரிந்து கொள்ள அவரது படங்களை உன்னிப்பாகப் பார்த்து பயிற்சி மேற் கொண்டு வருகிறாராம். அது மட்டுமின்றி முறையாகப் பரதநாட்டியமும் கற்று வருகிறாராம்.
இதில் ஜெயலலிதாவின் இளமைக்காலம் முதல் முதுமைக்காலம் வரை நான்கு தோற்றங்களில் கங்கனா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.