சீரியலில் அடியெடுத்து வைக்கும் நடிகை!!

1182

நடிகை சாந்தினி தமிழரசன்

நடிகை சாந்தினி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள தாழம்பூ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார். நடிகை சாந்தினி தமிழரசன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தந்தையின் பெயர் “தமிழ் அரசன்” விசுவல் கம்யூனிகேஷன் படித்தவர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர்.

பள்ளி பருவத்தில் இருந்தே நடித்து கொண்டிருப்பவர். 2018 ஆம் டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். 2007இல் மிஸ் சென்னை போட்டியில் கலந்து பல விருதுகளை வாங்கினார். அவர் நடித்த முதல்படம் சித்து +2.பிறகு – சில வருட இடைவேளைக்கு பிறகு அவர் நடித்த படம் தான் “நான் ராஜாவாக போகிறேன்”. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் பிரபலமானவர்.

தற்போது இவர் தொடர்ந்து 10 படங்கள் தன் கைவசம் வைத்துள்ளார் .ஆனால் நடித்த எந்த படமும் தனக்கு கை கொடுக்காத நிலையில் தன் பிரபலத்திற்காக தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் “தாழம்பூ “என்ற சீரியலில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்து வெற்றி பெற்றாலும் தனக்கென்று நிலையான இடம் கிடைக்காததால் பல கிசு கிசுக்கள் சினிமா வட்டாரங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தற்போது சின்னத்திரையில் அவர் அடியெடுத்து வைத்திருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தாழம்பப்பூ சீரியலயுடைய ப்ரோமோவே நன்றாக அமைந்தது , இப்பொழுது சீரியல் உலகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும் என்பது சாந்தினியுடைய கனவு. வீட்டில் சாந்தினியையை எல்லோரும் “” டீம்பு “”என்று எல்லோரும் செல்லமாக அழைப்பர்.

செல்லமாக வளர்ந்து மீடியா உலகில் அடியெடுத்து வைத்து படி படியாக முன்னுக்கு வரும் சாந்தினி – கவண் படத்தில் விஜய் சேதுபதியை மிக அழுத்தமாக கட்டி பிடித்து நின்றது – மிகவும் பிரபலம் ஆனது. தாழம்பூ சீரியலலிலும் பல கட்டிப்புடி வைத்தியங்கள் இருக்கிறது என்பது ப்ரோமோவை பார்த்தாலே தெரிகிறது. அவர் எடுக்கும் முயற்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.