மீண்டும் ஆடை பிரச்சனையை கையிலெடுத்த பிக்பாஸ் மதுமிதா : என்ன சொல்லியிருக்கார் பாருங்க!!

983

பிக்பாஸ் மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மதுமிதா டிவிட்டரில் ஒரு கேள்வி கேட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா காவிரி விவகாரம் குறித்து பேசியதால் சக ஹவுஸ்மேட்ஸ் அவரிடம் சண்டையிட்டனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா கத்தியால் தனது கையை சரமாரியாக கிழித்துக் கொண்டார்.

இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதுமிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட பின்னர், விஜய் டிவி ஏற்பாடு செய்த பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட மதுமிதா, அபிராமி, சாக்ஷி ஆகியோரின் ஆடை குறித்து விமர்சித்தார்.

பெரும் பரபரப்பு அத்தனை ஆண்கள் இருந்த பிக்பாஸ் வீட்டில் அபிராமியும் சாக்ஷியும் உள்ளாடை அணியாமல், அரைகுறை ஆடையில் சுற்றித்திரிந்ததாக கூறினார் மதுமிதா. மதுமிதாவின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் ஆடை விவகாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதே மதுமிதா, அபிராமி, சாக்ஷி ஆகியோரின் ஆடை குறித்து பேசி ஹவுஸ்மேட்ஸ்களின் கோபத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் மீண்டும் ஆடை விவகாரம் குறித்து பேசியிருக்கிறார் மதுமிதா. ஆடை சுதந்திரம் என்றால் என்ன? இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ள மதுமிதா, அதற்கு மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, ஆடை விவகாரத்தில் எனக்கு நியாயமான முடிவுகளை எடுக்க இரவுகள் நீள்கிறது. ஆடை சுதந்திரம் என்றால் என்ன? நாம் நினைத்த உடைகளை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியுமா? நாம் அணியும் உடை மற்றவர்களை பாதிக்குமா? பாதிக்காதா? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.

மதுமிதாவுக்கு ஆதரவு மதுமிதாவின் இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர். பெரும்பாலான பதிவுகள் மதுமிதாவுக்கு ஆதரவாகவே உள்ளது. அவற்றில் சில.. ஆடை சுதந்திரம் நீங்க இருக்குற இடத்தை பொறுத்தது அது, இங்கே தமிழ்நாட்டுல எதுக்கு பேர் போனது? பண்பு, கலாச்சாரம் அதில் உடையும் அடங்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கட்டுப்பாடுகள் , இதே வெளிநாடு சென்றால் அங்கு கதையே வேறு, அதனால் நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே இந்த ஆடை சுதந்திரம் நிர்ணயிக்கபடுகிறது என தெரிவித்துள்ளார்.

ஆபாசமாக இருக்கக்கூடாது நாம் அணியும் ஆடையே நமது மரியாதையை தீர்மானிக்கிறது. ஆடை குறைந்தால் நம்முடைய மரியாதையும் குறையும்.நமக்கு பிடித்த ஆடையை அணிய முழு சுதந்திரம் உண்டு ஆனால் அது ஆபாசமாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார் இந்த ரசிகர்.