ரொம்ப தூரம் போயிட்டியா ராம் : 96 ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்!!

978

96 ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்

96 படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அந்த படக்குழுவினர் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 96 படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனாலும் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓயவில்லை.

பல பள்ளிகளில் ரீயூனியன் நடக்க காரணம் அந்த படம்தான் என்றால் மிகையாகாது. 96 என்றவுடன் நமது நினைவுக்கு வருவது த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் தான். பள்ளி பருவ காதல் அதற்கு பின் ஏற்படும் பிரிவு பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் காதலர்கள் அவர்களுக்குள் இருக்கும் தீரா காதல் அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை மீண்டும் பிரிவு என ஒரு இறுக்கமான காதல் கவிதை தான் 96.

கடந்த ஆண்டு அக்டோபர் 4 இதே நாளில் வெளியாகி மிக பெரிய வெற்றி அடைந்தது மட்டுமின்றி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது. 96 படம் ரீலிஸாகி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. நேற்றிலிருந்து ஒன் இயர் ஆப் 96 என்ற ஹாஸ்டேக் இணையத்தில் டிரென்ட் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதி ராமாகவும் ஆதித்யா பாஸ்கர் சிறு வயது ராமாகவும் த்ரிஷா ஜானுவாகவும் கௌரி சிறு வயது ஜானுவாகவும் நடித்து ப்ரேம் குமார் இயக்கிய படம் 96. தற்போது 96ன் நினைவுகளை பகிரும் நோக்கில் படக்குழு லைப் ஆப் 96 என்ற வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டு இருக்கிறது.

அந்த வீடியோவும் படத்தை போல சிறு ஹைகூவாக மனதின் காதல் பக்கங்களை தட்டி எழுப்பியுள்ளது. இதயத்துடிப்பின் லப் டப் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ரொம்ப தூரம் போயிட்டியா ராம் என்ற ஜானுவின் குரல் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் 96 போஸ்டரை பதிவேற்றம் செய்து நன்றி தெரிவித்து உள்ளனர்.

96 Kannada Remake 99 Movie Poster

96 படம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படம் தெலுங்கு கன்னடம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது கன்னடத்தில் 99 என்ற தலைப்பில் கணேஷ் மற்றும் பாவனா சேர்ந்து சேதுபதி த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் .

தெலுங்கில் சமந்தா மற்றும் சர்வனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.சர்வானந்த் தமிழில் எங்கேயும் எப்போதும் மற்றும் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.