முதல் காதலில் தோல்வியடைந்த தர்ஷன்.. சனம் செட்டியை காதலிக்கிறாரா? உண்மை இது தான்!!

844

முதல் காதலில் தோல்வியடைந்த தர்ஷன்

பிக்பாஸ் வீட்டைவிட்டு கடந்த வாரம் தர்ஷன் நாமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்பட்டது பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் தர்ஷனிற்கு சனம் ஷெட்டியுடன் காதல் இருக்கிறதா இல்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தர்ஷன் இதுவரை சனம் ஷெட்டியை காதலிக்கிறேன் என்று ஒரு முறைகூட கூறியதில்லை. ஆனால் சனம் ஷெட்டி தர்ஷனை காதலிப்பதாக பல நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தன் காதல் குறித்து பேசியுள்ளார்.

அதில், அவரிடம் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கு தர்ஷன் இல்லை நான் சிங்கிள் என்று கூறியுள்ளார். ஆக சனம் ஷெட்டியை தர்ஷன் காதலிக்கவில்லை என்று தெளிவாக தெரிகிறது.

தர்ஷனிடம் நீங்கள் யாரையாவது காதலித்துள்ளீர்களா என்றும் கேள்விக்கு, தர்ஷன் கூறியதாவது ஆம் காதலித்துள்ளேன், ஆனால் அந்த பெண் என்னை வேண்டாம் என்று கூறிவிட்டாள். அதற்கான காரணமும் தெரியவில்லை என்று கூறியுள்ளார். தர்ஷனின் முன்னாள் காதலி பற்றின விவரம் அவர் குறிப்பிடவில்லை.