கமலை ரகசியமாக திருமணம் செய்த சிம்ரன்? ஓர் ப்ளாஷ்பேக்!!

1208

கமலை  திருமணம் செய்த சிம்ரன்

1990களில் கனவுக்கன்னியாக இளைஞர்களை கட்டிப்போட்டவர் சிம்ரன், முன்னணி நடிகர்கள் அனைவருடன் இணைந்து கலக்கியவர்.அசத்தலான நடிப்பு, வசீகரமான நடனம் என தன்னுடைய திறமையால் தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்டவர்.

புகழின் உச்சத்தில் இருந்த போதே, பிரபுதேவாவின் அண்ணன் ராஜீசுந்தரத்துடன் காதல், அப்பாஸ்சுடன் காதல், கமலுடன் ரகசிய திருணம் என பல கிசுகிசுக்களில் சிக்கியவர்.

இதுகுறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய சிம்ரன், அப்பாஸ் எனது நல்ல நண்பர். இருவரும் பெங்களூரில் மாடலிங் செய்தோம். ராஜூவுடன் காதல் ஏற்பட்டதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நண்பர்களால் பிரிந்துவிட்டோம்.

கமல்சார் என் மரியாதைக்குரியவர். அவருடன் நான் நடித்துக்கொண்டிருக்கும் போது அவரது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம். அதனால் என்னையும் அவரையும் இணைத்து பேசியிருக்கலாம்.

என் காதல் நிஜமானது தீபக்குடன் தான், சிறு வயது தோழனான அவன் என்னை ரிஷி என்று தான் அழைப்பான்.நான் அவனை திருமணம் செய்து கொள்வேன் என கனவிலும் நினைத்து பார்த்ததில்லை, “எல்லாமே விதியின்” கையில் தான் இருக்கிறது.

நான் முதல் படம் பண்ணும் போதே நீ நல்லாவரணும் ரிஷி என்று டெல்லியிலிருந்து போனில் வாழ்த்தினான்.சினிமாவில் பிஸியானதும் அவனை சந்திக்க முடியாமல் போனது, எனினும் எனக்காக அவன் சந்தோஷப்பட்டான்.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வியும் தங்கை மோனலின் மரணமும் என்னை ரொம்பவே பாதித்தது.இன்னும் பல விடயங்கள் பாதித்ததால் நடித்தது போதும் என்ற முடிவுக்கு வந்தேன், இதை என் பெற்றோரிடம் சொன்னதும் அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.

அப்போது தான் அம்மா தீபக்கை பற்றி கேட்டார், என் வாழ்வில் நல்லது நடந்தபோதெல்லாம் ஓடி வந்து வாழ்த்தியவன் அவன் தான், நண்பரே கணவர் ஆனால் பெரிய ப்ளஸ் தானே… அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலியே!!! என நெகிழ்கிறார்.