வடிவேலு
வடிவேல் என்றாலே உலகம் முழுவதும் தெரியாதவர்கள் யாரும் இல்லை. அவர் திரைக்கு வந்து பல நாட்கள் ஆகியிருந்தாலும் இணையதளத்தில் தினமும் அவரை வைத்து வராத மீம்ஸ் இல்லை எனலாம்.
தற்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்ற படத்தில் வைகைப்புயல் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியான வேளையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இப்போது அந்த படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு நடிக்க இருக்கிறார் என்று.
மேலும் யோகிபாபு பக்கத்தில் இருந்து இந்த செய்தி தற்போது பிரத்யேக அழைப்பின் மூலம் சம்மந்தப்பட்டவர்களை அழைத்து உறுதி செய்துள்ளது நமது சினிஉலகம்.
யோகி பாபு தற்போது அடுத்தடுத்து படங்கள் கொடுத்துவருகிறார். ஆனால் வடிவேலுக்கு பதிலாக ஏன் இந்த படத்தில் யோகிபாபு மாற்றப்பட்டுள்ளார் என்று சரியான தகவல் வெளியாகவில்லை. இருந்தாலும் பல நாட்களுக்கு பிறகு வைகைப்புயல் அவர்களை திரையில் பார்க்க ஆர்வமாக இருந்தவர்களுக்கு இது ஏமாற்றம் என்றே சொல்லலாம்.