பேனர் வைப்பதற்கு பதிலாக எல்லோரையும் அசர வைத்த விஜய் சேதுபதி ரசிகர்கள் : இதுதான் பெஸ்ட்!!

858

அசர வைத்த விஜய் சேதுபதி

சமீபத்தில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உ யிரிழந்த துயர சம்பவத்தை அடுத்து அனுமதி பெறாமல் பேனர் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் என பலரும் எந்த ஒரு பட ரிலீஸ் முன்னிட்டு பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

இதனை தொடர்ந்து சங்கத்தமிழ் படம் ரிலீஸ் ஆகும் வேளையில் கள்ளக்குறிச்சியில் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் சார்பாக பேனர் வைக்காமல் கடுவனூர் என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரகாஷ் என்பவரின் ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடுவதற்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

இவர்களின் புதிய முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டும் அல்லாமல் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.ஆனால் ஒரு துயர சம்பவத்திற்கு பிறகு தான் இப்படி ஒரு முயற்சி எடுக்கிறோம் என்று எண்ணுகையில் ஒரு பக்கம் வருத்தம் எழும்புகிறது என்றே சொல்லலாம்.