ஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்!

928

எல்லாம் ஓரினம்தான்

எத்தனை நாட்களுக்குத்தான் ஆண் பெண் சுதந்திரம் என்று பேசிக்கொண்டு இருப்பது.. அதற்கு மேலும் சிந்திக்க பல விஷயங்கள் இருக்கின்றன என்று நடிகை திரிஷா வலியுறுத்தி உள்ளார். நடிகைகள் இன்னமும் சினிமாவில் ஆண் பெண் பேதம் பார்த்துதான் கதை அமைக்கிறார்கள்.

சம்பளம் போன்ற விஷயங்களை முடிவு செய்கிறார்கள் என்று குமுறலுடன் இருக்கும் காலகட்டம்தான் இது. என்றாலும் கூட இப்போது இதெல்லாம் கவலைப்பட வேண்டிய பெரிய விஷயம் இல்லை என்கிறார் நடிகை திரிஷா. அவர் என்னதான் சொல்ல வருகிறார்? பேசிப்பேசி ஆணுக்கு முழு சுதந்திரம் பெண்ணுக்கு சுதந்திரம் இல்லை என்றே நாம் எப்போதும் பேசிக்கொண்டு இருக்க வேண்டாமே.

சுதந்திரம் போன்று இரு பாலருக்கும் எல்லாமே அவர்கள் வளரும் விதத்திலும் சூழ்நிலையிலும் அமைகிறது, சுற்றி உள்ளவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் பெண் சுதந்திரம் என்று பழங்கதை பேசிக்கொண்டு இருப்பது வெட்டி வேலை என்கிறார்.

வரும் காலத்தில் நமக்கு சுதந்திரம் இருக்குதோ இல்லையோ, தண்ணீர் இருக்காது. மலைகள் இருக்காது, காடுகள் அழிந்து போகும் நிலை. பனி மலைகள் உருகி வருகின்றன. சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்குமா என்பது சந்தேகம்.இப்படி இயற்கை பேரழிவைப் பற்றி கவலைப்பட நமக்கு இதுதான் சரியான நேரம். இவைகளை விட்டு இதை விட்டுட்டு, இப்போதும் நாம் நம்மைப் பற்றியே கவலைப்பட்டு கொண்டு இருக்க வேண்டாமே என்பதுதான் என்னுடைய கருத்து.

இயற்கைக்கு நம்மால் முடிந்ததை மட்டும் அல்ல, முடியாததையும் சிரமப்பட்டு செய்ய முயற்சி வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டும். நமது சிந்தனைகள் நமது பேச்சுக்கள் நமது சிந்தனைகள் மாற வேண்டும். எப்போதும் வேண்டாததை பேசி வீணாகிக்கொண்டு இருக்கிறோம்.

சாதாரணமாக நாம் பேசுவது வேறு, இப்படிப்பட்ட பழம் சிந்தனைகளை பேசிப் பேசியே வீணாவது என்பது வேறு. அதனால் ஆண் பெண் என்று இரு பாலரையும் பிரிக்காமல், நாம் நம்மைப் பற்றி கவலைப்படாமல் இயற்கையைப் பற்றிய கவலையை அதிகரிக்கலாம், என்று அதிர வைக்கிறார் திரிஷா.