மக்களே நீங்கள் லாஸ்லியாவை ஜெயிக்க வைத்தால்… கவினின் நண்பர் போட்ட அதிரடி ட்விட்!!

945

கவினின் நண்பர் போட்ட அதிரடி ட்விட்

பிக்பாஸ் சீசன் மூன்று முதல் இரு சீசன்களைவிட மிகவும் விறு,விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் இப்போது கிளைமேக்ஸை நெருங்கும் பிக்பாஸ் உச்சகட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது.

சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரையும் ஒரு பிள்ளையைப் போல் நடத்தினார். ஆனால் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிய போதே விமர்சனமாக எழுந்தது. அதேபோல் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தர்ஷனும் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் இன்றோடு 101வது நாளை எட்டி, யார் டைட்டில் வின்னர் என்னும் பரபரப்பில் இருக்கிறது.

இப்போதைய சூழலில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகேன் என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த சில தினங்களாகவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலங்கள் தான் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில்  நிகழ்ச்சியில் சாக்சி, கஸ்தூரி, வனிதா, அபிராமி, சேரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகின்றனர்.

இந்த நிலையில் கவினுக்காக குடும்பத்தினர் சந்திப்பில் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த அவரது நண்பர் பிரதீப் இப்போது ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில் அவர், லாஸ்லியாவை நீங்கள் வெற்றிபெற செய்தால் நான் அவரிடம் கவினுக்கு பதிலாக அடிவாங்கத் தயார்..”என ட்விட் போட்டுள்ளார்.