நிவேதா தாமஸ்..
தமிழில் 90 ‘s கிட்சின் ஃபேவரைட் தொலைக்காட்சி தொடர்களான ‘மை டியர் பூதம்’, ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘சிவமயம்’ போன்ற பல்வேறு சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள்.
இதை தொடர்ந்து சில மலையலா படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். மேலும் தமிழில் தளபதி விஜய் நடித்த ‘குருவி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் ‘போராளி’ படத்தில் நாயகியாக மாறினார்.
இதை தொடர்ந்து, நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாக நடித்தாலும், இவருக்கு தற்போது வரை, பெரிய நட்சத்திரங்கள், படங்களில் தங்கை, மகள் போன்ற கதாபாத்திரம் தான் கிடைக்கிறது.
இவரை சிறிய வயதில் இருந்து, சீரியல் மற்றும் படங்களில் பார்த்து வருவதனாலோ என்னவோ… தமிழில் ரசிகர்கள் மனதில் இவரால் ஹீரோயினாக நிலைக்க முடியவில்லை.
ஆனால் தெலுங்கில் இவர் அடுத்தடுத்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து கலக்கி வருகிறார்.
எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும், நடிகை நிவேதா தாமஸ் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் மாடர்ன் ட்ரெஸ்ஸை விட சேலையில் ஆண்ட்டி லுக்கில் ஜொலிக்கும் புகைப்படங்களில் நிவேதா தாமஸ் கொடுத்தால் அழகு என ஜொள்ளு விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
View this post on Instagram