வீட்டின் கதவில் செமையா போஸ் கொடுத்த நடிகை ஷோபனா !! வைரல் வீடியோ இதோ !!

946

நடிகை ஷோபனா..

நடிகை ஷோபனா, முதன் முதலில் மலையாளத்தில் ‘ஏப்ரல் 18’ எனும் படம் மூலம் நடிகையாக திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். மேலும் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சேர்த்து கிட்டத்தட்ட 230 படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக நிலை நிறுத்திக்கொண்டார்.

இவர் தமிழில் ‘தளபதி’, ‘எனக்குள் ஒருவன்’, ‘இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நாட்டியத்தில் தனது முழு வாழ்கையையும் அர்பணித்தார்.

இவர் கலைத்துறையில் சாதனை பெற்று பத்மஸ்ரீ , “கலா ரத்னா” போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். சென்னையில் “கலார்ப்பனா” என்னும் நடனப்பள்ளி ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார்.

நடிகை ஷோபனா 50 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை, இருந்தும் இவர் ‘அனந்தநாராயணி’ என்பவரை தத்தெடுத்து வளர்ப்பு மகளாக்கி கொண்டார். இவர் அவ்வப்போது தன்னுடைய போட்டோக்களை இணையத்தில் வெளியிடுவார் .

பரதநாட்டியத்தில் மிகுந்த ஆற்வம் கொண்ட இவர் அவ்வப்போது தன்னுடைய நடன வீடியோக்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவார் அந்த வகையில் இவர் மரக்குச்சிகளை வைத்து கதவிலும் , ஜன்னல் கண்ணாடிகளிலும் டிரம்ஸ் வாசித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் ” ஹோ டிரம்ஸ் வசிக்குறீங்களா நாங்க கதவுல தூசி தடுறிங்களோனு நெனச்சோம் ” என்று கமெண்டில் கிண்டல் செய்துவருகின்றனர்.