காதல் பிரிவுக்கு இது தான் காரணம் : முதன் முறையாக போட்டு உடைத்த நடிகை ஸ்ருதிஹாசன்!!

981

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றும் புகைப்படங்களும் அதிகம் வெளியாகின.

இதனால் கிடைத்த பட வாய்ப்புகளை தவிர்த்து விட்டு காதலனுடன் பொழுதை போக்கி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து, அவர்களுக்கு திருமணம் நடக்கவுள்ளது என்றும் செய்திகள் பரவிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர்.

ஆனால் தற்போது தான் தன்னுடைய காதலின் பிரிவு பற்றி ஸ்ருதிஹாசன் பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார். உண்மையாக, நான் ஒரு எமோஷனலான நபர். அதனால் என்னுடன் இருப்பவர் என் மீது எளிதில் ஆதிக்கம் செலுத்திவிடுகிறார்கள். அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான்.

“இப்போதும் என்னிடம் எந்த பார்முலா இல்லை. நல்லவர்கள் நன்றாக தான் நடந்துகொள்கின்றனர், சில சமயங்களில் தவறும் செய்கின்றனர். இதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒரு சிறந்த காதலை தேடிக்கொண்டிருக்கிறேன். அது வரும்போது ‘இதற்காகத்தான் காத்திருந்தேன்’ என உலகத்திற்கு அறிவிக்க காத்திருக்கிறேன் என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.