திருமணம் செய்துகொள்ள கேட்டு சீரியல் நடிகையின் வீட்டில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் : போலீசார் திடுக்கிடும் தகவல்!!

1145

ராஜா ராணி என்ற சீரியலில் வினோதினி என்ற வேடத்தில் நடிப்பவர் ரித்திகா. இவர் படப்பிடிப்பிற்கான வெளியே இருந்துள்ளார், அந்த நேரத்தில் அவரது வீட்டில் பிரச்சனை எழுந்துள்ளது.

அதாவது நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்ற இளைஞர், நான் கோபி செட்டிபாளையத்தில் இருந்து வருகிறேன்.

எனக்கு ரித்திகாவை மிகவும் பிடிக்கும், சீரியலில் பார்த்து அவரை காதலிக்கிறேன், அவரை திருமணம் செய்து வையுங்கள் என்று ரித்திகாவின் தந்தையிடம் கூறியுள்ளார்.

உடனே நடிகையின் தந்தை போலீசில் புகார் அளிக்க அந்த இளைஞரை போலீசார் விசாரித்து அவரது வீட்டிற்கும் தகவல் அளித்துள்ளனர். போலீசாரை சந்தித்த அந்த இளைஞரின் பெற்றோர், மன அழுத்த நோயால் பரத் பாதிக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி இப்படி செய்துவிடுவதாக பரத்தின் பெற்றோர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.