ரியலில் ஜோடியாகும் முன்.. ரீலில் ஜோடியாகும் கவின் – லாஸ்லியா.. விஜய் டீவி மாஸ்டர் பிளான்!

910

ரீலில் ஜோடியாகும் கவின் – லாஸ்லியா

பிக்பாஸ் 3 போட்டியாளர் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் விஜய் டீவி சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் வைரலானார் லாஸ்லியா மரியநேசன். இவர்கள் இளைஞர்கள் மத்தியில் இவர் பெரிதும் பிரபலம் அடைந்தார்.

அதேபோல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் கவின் பெரிய அளவில் வைரலானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற நேரத்தில் இருந்து இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உருவானார்கள். இதில் கவின் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

லஸ்லியா மூன்றாவது இடம் பிடித்தார். தொடக்கத்தில் இவர்கள் நல்ல பெயர் எடுத்தனர்,. ஆனால் போக போக மக்கள் இவர்களை விமர்சனம் செய்யவும் தொடங்கினார்கள். ஆனால் என்ன ஓவியா போலவே இருவருக்கும் இணையத்தில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு ஆர்மி எல்லாம் இருக்கிறது.

தற்போது கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு சினிமா வாய்ப்புகள் கதவை தட்ட தொடங்கி உள்ளது. நிறைய இயக்குனர்கள் இவர்களை படத்திற்காக அணுகி வருகிறார்கள். சீரியல் தற்போது விஜய் டீவியும் இவர்களை சீரியலில் நடிக்க அணுகி இருக்கிறது. விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் பெரிய ஹிட் அடித்து நிறைவு பெற்றது.

இதன் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. என்ன உள்ளனர் ராஜா ராணி 2ல் தற்போது லாஸ்லியா, கவின் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதனால் சீரியல் தரப்பு தற்போது கவின் – லாஸ்லியாவுடன் பேசி வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.