திருமணத்துக்கு தயாரான பிரபல நடிகை
நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கும்கி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் பிஸியான நடிகையானார். இரண்டாவது படமான சுந்தரபாண்டியனும் வெற்றி பெற, முன்னணி நடிகைகளின் வரிசைக்கு டக்கென சென்றுவிட்டார்.
இதையடுத்து குட்டிப்புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன் என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். விஷாலுடன் கிசுகிசு இடையில் நடிகர் விஷாலும், லட்சுமி மேனனும் காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி தான் என பின்னர் தெரியவந்தது.
கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்தார் லட்சுமி மேனன். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. இந்த ஆண்டு தான் பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் யங் மங் சங் படத்தில் அவர் நடித்துள்ளார்.
ஆனால் அதன் பிறகு அவர் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. 10வது படிக்கும் போதே லட்சுமி மேனன் நடிக்க வந்துவிட்டார். இதனால் அவர் படிப்பில் முழு கவனம் செலுத்தி வந்தார். திருமணம் செய்ய முடிவு அவருக்கு தற்போது 22 வயது ஆகிறது. எனவே லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அவருக்கு திருமணம் நடக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.