பிரபல நடிகை ரோஜா
பிரபல நடிகையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரோஜாவுக்கு அவர் கட்சி தலைமையால் ஜாக்பாட் அடித்துள்ளது.
90களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஆந்திராவில் தீவிர் அரசியலில் ரோஜா குதித்தார்.ஆந்திராவின் நகரி தொகுதியில் 2வது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் சார்ந்த, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தான் இப்போது ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ளது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவுக்கு ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவியை வாரி வழங்கியுள்ளார்.
இது ரோஜா ஆதரவாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த பதவியானது அமைச்சருக்கு நிகரான பதவியாகும்.அதன்படி ரோஜாவுக்கு, மாத ஊதியமாக, ரூ. 2 லட்சம் கிடைக்கும்.
இதோடு வாகன படி என்பதன் கீழ் ரூ 60,000, தங்குமிடத்திற்கு ரூ 50000, தனிப்பட்ட சலுகையாக ரூ. 70000, மொபைல் கட்டணங்களுக்கு ரூ.2000 ரோஜாவுக்கு வழங்கப்படும்.ஆக மொத்தம் மாதம் 3.82 லட்சம் ரூபாய் ரோஜாவுக்கு கிடைக்க போகிறது.