சினிமா ஸ்டார்களுடன் இணைந்த பிரபல நடிகரின் மகள் :அழகான அந்த பெண் என்ன செய்கிறார் தெரியுமா!!

875

பிரபல நடிகரின் மகள்

சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் தாங்களும் இத்துடன் இணைய வேண்டும் என களத்தில் குதித்து விடுகிறார்கள். நடிகர்கள், நடிகைகள் தான் ஆக வேண்டும் என்பதில்லை.

சினிமாவை சார்ந்த மற்ற பணிகளிலும் சினிமா வாரிசு இருக்கிறார்கள். தற்போது புதுவரவாக தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா கோனிடெலா ஆடை வடிவமைப்பாளாராக இறங்கியுள்ளார்.

அண்மையில் வெளியான சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் அமிதாப் பச்சன், தமன்னா, நயன்தாரா, சிரஞ்சீவி ஆகியோரின் உடைகளை சுஷ்மிதா தான் வடிவமைத்தாராம்.

1800 களில் நடந்த வரலாறு என்பதால் இப்படம் பற்றிய ஆவணங்கள் எதுவும் சரிவர கிடைக்கவில்லையாம். இதனால் ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த தகவலை கொண்டு அவர் இந்தியாவின் பல இடங்களிலிருந்து துணிகளை வரவழைத்து ஆடைகளை வடிவமைத்தாராம்.சுஷ்மிதாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.