பிரபல நடிகர் பார்த்திபன் வீட்டில் 10 வருடங்களுக்கும் மேலாக உதவியாளராக பணியாற்றியவர் ஜெயங்கொண்டான். வீட்டில் திருட்டு நடந்த நிலையில் பார்த்திபன் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.
இந்நிலையில் ஜெயங்கொண்டான் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னை பார்த்திபன் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்தார் என கூறியுள்ளார்.
பணியில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை கேட்டப்போது பார்த்திபன் தன்னை தாக்கி இப்படி செய்ததாக புகாரில் கூறியுள்ளார்.