ஜெயலலிதாவின் வாழ்க்கை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகவும், வெப் சீரிஸாக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கே தனி போட்டி சினிமாவில் நிலவி வருகிறது.
இதில் படத்தை இயக்குனர் விஜய் இயக்க அதில் பாலிவுட் நடிகை கங்கனா ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு தலைவி என பெயர் வைத்து அண்மையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இந்நிலையில் காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. அரசியல் படத்தில் மட்டுமே அவ்வாறான கேரக்டர்களில் நடிப்பேன்.
இப்படத்தில் முதல் பாதி ஜெயலலிதாவின் 20 முதல் 30, 40 வயது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் இருக்கும். இரண்டாம் பாதியில் அரசியல் சம்மந்தப்பட்டதாக, எம்.ஜி.ஆர், கருணாநிதியுடான அரசியல் விஷயங்கள் இருக்கும் என கூறியுள்ளார்.