சூப்பர்ஸ்டார் ரஜினி
நடிகர் ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடிகர் தன்ஷிகா அவரை சந்தித்தாராம்.
அவர் ஹீரோயினாக நடித்த ‘யோகி டா’ படத்தின் சில காட்சிகளை ரஜினிக்கு போட்டு காட்டினாராம். படத்தில் வரும் சண்டை காட்சியை பார்த்து வியந்த ரஜினி “நல்லவேளை நீ ஆணாக பிறக்கவில்லை. என்னைப்போன்ற ஹீரோக்கள் காணாமல் போயிருப்பார்கள்” என கூறினாராம்.
அதை கேட்டு தன்ஷிகாவிற்கு புல்லரித்துவிட்டதாம். மேலும் கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தது பற்றி பேசிய அவர், “அந்த படத்திற்கு பிறகு அனைவரும் என்னை யோகி என்றே அலைகிறார்கள். என்னுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.