மனம் திறந்த அறந்தாங்கி நிஷா
தொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா (38)
பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நகைச்சுவை மேடையை தன் அசாதாரண பேச்சாற்றலால் தெறிக்கவிட்டவர் இவர்.
தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கும் அறந்தாங்கி நிஷா, ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் துபாய்க்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அறந்தாங்கி நிஷா அளித்த பேட்டியில், நான் துபாயிலிருந்து இரு தினங்களுக்கு முன்னர் தான் வந்தேன்.
என்னை விமான நிலையத்தில் பார்த்த எல்லோரும் ஏன் இந்த சமயத்தில் பயணம் செய்கிறீர்கள் என கேட்டனர். என் மீதுள்ள அக்கறையில் தான் அப்படி கேட்டார்கள்.
ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப தைரியமாக இருக்கேன். வயிற்றில் உள்ள என் குழந்தையும் தைரியமாக இருக்கு.இந்த இடத்துக்கு வர என் வாழ்க்கையில் நான் அதிகம் கஷ்டப்பட்டுள்ளேன்.
என் கணவர் அரசு வேலை பார்த்தாலும் பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் தான் இருக்கோம். எல்லா போராட்டத்தையும் தாண்டி மேலே வருவது அதிக கஷ்டம்.
என் வயிற்றில் இருக்கும் என் குழந்தைக்காகவும் சேர்ந்து தான் ஓடுறேன். சில சமயம் கால்கள் வீங்கிடும். சோர்வாக இருக்கும். அப்போது நான் நகைச்சுவை செய்த நிகழ்ச்சிகளை பார்ப்பேன் என கூறியுள்ளார்.