அமலா பால்
ஆடை படத்திற்கு ரசிகர்கள் தந்த வரவேற்பும் ஆதரவும் என்னை இன்னும் மேலும் அதிகமாக புதியதை செய்ய தூண்டியுள்ளது. அந்த வழியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் என் சினிமா பயணத்தில் அடுத்ததொரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன் என்று நடிகை அமலபால் கூறியுள்ளார்.
மிகுந்த திறமை வாய்ந்த பெண் இயக்குநரான நந்தினி ரெட்டி போன்றவருடன் பணிபுரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ஓ பேபி முதலாக அவரது வெற்றிப்படங்களுக்கு நான் ரசிகை. பெண்களை மையமாகக் கொண்டு கதை சொல்லும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று நெட்ஃபிளிக்ஸில் இணைந்தது பற்றி தெரிவித்துள்ளார் நடிகை அமலா பால்.
நடிகை அமலா பால் ஆடை படத்திற்குப் பின், நெட்பிளிக்ஸில் வெளியான சர்சைக்குரிய லஸ்ட் ஸ்டோரீஸ் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கடந்த ஆண்டு, நெட்பிளிக்ஸ் தளத்தில் நான்கு குறும்படங்கள் அடங்கிய திரைப்படமாக வெளியானது லஸ்ட் ஸ்டோரீஸ்.
அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜீ, கரன் ஜோஹர் என இந்தி சினிமாவின் முக்கியமான நான்கு இயக்குநர்கள் இதில் இடம்பெற்ற குறும்படங்களை இயக்கியிருந்தனர். பெண்களின் பாலியல் குறித்த முக்கியமான கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பிய இப்படம் வழக்கம் போல சர்ச்சையானது.
பல்வேறு அமைப்புகள் இப்படத்திற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்திருந்த போதும், இப்படம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் இடம்பெற்ற முதல் குறும்படத்தில் அமலா நடிக்கவிருக்கிறார். இந்தியில் ராதிகா ஆப்டே நடித்த பாத்திரத்தை தெலுங்கில் அமலா ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாபால் டிஜிட்டல் மீடியா பலமாக வளர்ந்துள்ள இந்த சூழலில், வட இந்தியாவைப் போலவே தென்னிந்திய பிரபலங்களும் டிஜிட்டல் மீடியத்தில் களமிறங்கி வருகிறார்கள். OTT எனும் டிஜிட்டல் மீடியத்தில் தற்போது தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்களின் படங்களும், வெப் சீரிஸ்களும் வரிசைகட்டி களமிறங்குகின்றன.
இந்த வரிசையில் உலகின் நம்பர் 1 டிஜிட்டல் மீடியவான நெட்ஃபிளிக்ஸில் ஒரு புதிய படத்திற்காக தற்போது அமலா பால் இணைந்திருக்கிறார். ஆந்தாலஜி முறையில் உருவாகும் இப்படத்தில் அமலா பால் நடிக்கும் பகுதியை நந்தினி ரெட்டி இயக்குகிறார்.
சவாலான கதாபாத்திரங்கள் இது பற்றி நடிகை அமலா பால் தெரிவிக்கும்பொழுது, கடந்த சில வருடங்களாக நான் மிகவும் வித்தியாசமான சவால் நிறைந்த கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறேன். ரசிகர்கள் புதிய சிந்தனைகளுக்கு எப்போதும் பெரும் வரவேற்பும் மதிப்பும் தருகிறார்கள்.
ஆடை படத்திற்கு ரசிகர்கள் தந்த வரவேற்பும் ஆதரவும் என்னை இன்னும் மேலும் அதிகமாக புதியதை செய்ய தூண்டியுள்ளது. அந்த வழியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் என் சினிமா பயணத்தில் அடுத்ததொரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன்.
அதிலும் மிகுந்த திறமை வாய்ந்த பெண் இயக்குநரான நந்தினி ரெட்டி போன்றவருடன் பணிபுரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ஓ பேபி முதலாக அவரது வெற்றிப்படங்களுக்கு நான் ரசிகை. பெண்களை மையமாகக் கொண்டு கதை சொல்லும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
என்னை இந்த திரைப்படத்திற்காக தேர்வு செய்தமைக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உலகின் முன்னணி OTT டிஜிட்டல் மீடியமாக விளங்கும் நெட்ஃபிளிக்ஸின் தென்னிந்திய வருகை, இங்கே பல புதிய மாற்றங்களையும், கதைக்கருக்களில், எதார்த்தமான படைப்புகளை உருவாக்கும் என நம்புகிறேன்.
இந்த மாற்றத்தின் ஆரம்ப கட்டத்திலேயே நெட்ஃபிளிக்ஸ் உடன் இணைந்ததில் மேலும் பெருமை கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் ஆதரவை எனக்கு தொடர்ந்து அளிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி என்று கூறியுள்ளார்.