முன்னணி தமிழ் நடிகையின் ஆசை
நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமா தொடங்கி பாலிவுட் வரை அதிகம் பிரபலமான நடிகை. லேடி சூப்பர்ஸ்டார் என அவரை சொல்லும் அளவுக்கு அதிக படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி.
சென்ற வருடம் அவர் திடீரென இறந்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஹோட்டல் அறையில் குளியல் தொட்டியில் அவர் மூழ்கி இறந்து கிடந்தார்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவேண்டும் என விரும்புவதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
“வாழக்கை வரலாற்று படங்களில் நடிக்க விரும்புகிறேன். குறிப்பாக நடிகை ஸ்ரீதேவியின் வாழ்கையை யாரவது படமாக்கினால், நான் அதில் இருக்கவேண்டும் ஏன் விரும்புகிறேன்” என தமன்னா தெரிவித்துள்ளார்.