மனம் திறந்த பிரபல நடிகை!
நடிகை கங்கனா ரனாவத் தனது முதல் காதல் முதல் முத்தம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நடிகை கங்கனா ரனாவத் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அண்மையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், குழந்தைகள் உடலுறவு கொள்வதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும். குழந்தைகள் உடலுறவு கொள்வதை பார்த்து பெற்றோர் மகிழ்ச்சியடைய வேண்டும், நான் பாலியல் உறவில் ஆக்டிவாக இருப்பதை பார்த்து எனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர் என்று கூறினார்.
15 வயதில் காதல் கங்கனாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளார் கங்கனா ரனாவத். அதாவது நான் 15 வயதிலேயே ஆசிரியர் ஒருவரின் மீது காதல் கொண்டேன். துப்பட்டாவை வைத்து.. அப்போது நான் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது சந்த் சுப்பா பாதல் பாடல் வெளியானது. அதனால் அந்த ஆசிரியரை மயக்க என்னுடைய துப்பட்டாவை பயன்படுத்தினேன்.
என்னுடைய முதல் ரிலேஷன்ஷிப் 17-18 வயதில் வந்தது. நான் அப்போது சண்டிகரில் இருந்தேன். என்னுடைய ஃபிரன்ட் அவளுடைய பாய் ஃபிரன்டுடன், டேட்டிங் சென்றிருந்தாள். அப்போது அவரின் நண்பரும் நானும் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தோம்.
அவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். ரொம்ப க்யூட்டாக இருப்பார். அவருக்கு 28 வயசு. எனக்கு 16- 17 வயசு இருக்கும். அவர் மீது நான் காதல் கொண்டேன். அவர் என்னை ஒரு குழந்தையை போன்று பார்த்தார். காதல் விளையாட்டுக்கு நான் புதியவள் என்பதை கண்டுபிடித்துவிட்டார். என் இதயமே நொறுங்கிவிட்டது.
நான் அவரை வெறித்தனமாக காதலித்தேன். நான் அவருக்கு மெஸேஜ் அனுப்பினேன், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், நான் வளருவேன் என்று. இவ்வாறு தனது காதல் குறித்து கூறிய கங்கனா ரனாவத், தனது முதல் முத்தம் குறித்தும் பேசினார்.
முத்தம் குறித்து அவர் பேசியதாவது “என்னால் அவரை முத்தமிட முடியவில்லை, அதனால் நான் என் உள்ளங்கையில் முத்தமிடுவதைப் பயிற்சி செய்தேன். எனது முதல் முத்தம் மேஜிக் போன்று அல்ல, அது குழப்பமாக இருந்தது. என் வாய் உறைந்துவிட்டது. அப்போது அவர் உன் வாயை கொஞ்சமாவது அசை என்றார். இவ்வாறு தனது முதல் காதல் முத்தம் குறித்து மனம் திறந்து பேசினார்.
கங்கனா ரனாவத், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான மேக்கப் டெஸ்ட் அமெரிக்காவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.