கல்லூரி விடுதியில் அந்த மாதிரி படம் பார்த்தேன் : ஓப்பன் பேட்டியால் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!!

1830

பேட்டியால் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை

முதல் முறையாக தான் ஆபாச படம் பார்த்த அனுபவம் குறித்து நடிகை பிரியா பவானிசங்கர் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமா நடிகையாக உயர்ந்தவர் பிரியா பவானிசங்கர்.

மேயாதமான் படம் மூலம் கிடைத்த நல்ல பெயரை சரியாக பயன்படுத்திக்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் அவர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, கோலிவுட்டின் ராசியான நடிகைகள் பட்டியலில் பிரியாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

பிரியா காட்டில் அடைமழை இந்தியன் 2, எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் ஒரு படம், அருண் விஜய்யுடன் மாஃபியா என பிரியாவின் காட்டில் அடைமழை பெய்து வருகிறது. தனது நல்ல பெயரை தக்க வைத்துக்கொள்ள அவரும் கடுமையாக உழைத்து வருகிறார்.

காதல் சர்ச்சை ஆனால் அவரது முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் விஷமிகள் சிலர், பிரியாவின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில வதந்திகளை பரப்பி விடுக்கின்றனர். சமீபத்தில் பிக் பாஸ் கவினின் முன்னாள் காதலி பிரியா தான் என சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

ஆபாச படம் பார்த்த அனுபவம் இந்நிலையில் பிரியா முதல் முறை ஆபாச படம் பார்த்தது தொடர்பாக அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் தான் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த போது, சீனியர் அக்காக்களுடன் சேர்ந்து அந்த மாதிரியான படம் பார்த்ததாக பிரியா கூறியுள்ளார்.

கல்லூரி விடுதியில் அந்த பேட்டியில் தொகுப்பாளினி பிரியாவிடம் ‘அந்த மாதிரி படங்கள் பார்த்ததுண்டா’ என கேட்கிறார். அதற்கு “அந்த படங்களை எல்லோருமே பார்த்திருப்பார்கள். என்னுடைய 18வது பிறந்தநாளின் போது கல்லூரி விடுதியில் இருந்தேன். பெரும்பான்மையான மாணவிகள் ஹாஸ்டலில் இல்லை.

அப்போது ஒரு சீனியர் அக்கா என்னோட அறிவுக்கண்களை திறந்து வைப்பதாகக் கூறி அந்த படத்தை எனக்கு போட்டு காண்பித்தார். அந்த மங்களகரமான காரியம் தான் அது”, என பிரியா பதிலளித்துள்ளார். வைரலாகும் வீடியோ பிரியா பவானிசங்கரின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உண்மையான ஓப்பன் டாக் என்றால் இது தான் என பிரியாவை சில ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் பலர் அந்த தொகுப்பாளினியை கடுமையாக விமர்சித்துள்ளனர். பொது நிகழ்ச்சியில் கேட்கக்கூடிய கேள்வியா இது என விளாசியுள்ளனர்.

நடிகை பிரியா பவானிசங்கருக்கு பொதுவெளியில் நல்ல பெயர் உள்ளது. குடும்பப்பாங்கான முக அமைப்பு கொண்டவர் என்பதால் நிறைய பெண் ரசிகைகளும் அவருக்கு உள்ளனர். சினிமாவில் வளர்ந்து வருக்கூடிய இந்த சூழலில் இப்படி பெயரை கெடுத்துக்கொள்ளும் படியாக பேட்டி கொடுப்பதை பிரியா தவிர்க்க வேண்டும் என்பது தான் அவரது ரசிகர்களின் அட்வைஸ்.