கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், நாளை தனது 23வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஸ்டோன் பெஞ்ச் சார்பில் கார்த்திக் சுப்பராஜ், கீர்த்தி சுரேஷின் 24வது படத்தை தயாரிக்கிறார். நாளை அந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பகல் 11.11 மணிக்கு வெளியிடுகிறார்.
23 வயது 24 படம் அக்டோபர் 17, 1992ம் ஆண்டு சென்னையில் பிறந்த கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். 2015ம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷிற்கு, 2016ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என தனது 23 வயது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் 24வது படத்தின் டைட்டில் அறிவிப்புக்காக காத்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் டு தேசிய விருது சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா என தொடர்ந்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தனுஷ், சூர்யா, விஜய், விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், பெரும்பாலும் ஓவர் ஆக்டிங் என டிரோல் செய்யப்பட்டு வந்தார். இந்த நிலையில், நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் தனது ஓவர் ஆக்டிங் இமேஜை ஓரங்கட்டி விட்டு தேசிய விருது நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.
ரஜினிக்கு ஜோடி சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 168 திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜோதிகா நாயகிகளாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று கீர்த்தி சுரேஷ் காத்துக் கொண்டிருக்கிறார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் மேயாத மன், மெர்க்குரி படங்களை தொடர்ந்து மூன்றாவது தயாரிப்பாக கீர்த்தி சுரேஷின் 24வது படத்தை தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் ஒரு படத்தையும் தெலுங்கில் மிஸ் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த இரு படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் தலைப்பை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் பரிசாக அவரது ரசிகர்களுக்கு நாளை காலை 11.11 மணிக்கு கார்த்திக் சுப்பராஜ் அறிவிக்க உள்ளார்.