15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்!!

1352

ராஜமாதா சிவகாமி தேவி

நடிகை ரம்யா கிருஷ்ணன் 15 வருடங்களுக்குப் பிறகு தனது கணவர் இயக்கத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் 1983 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் இவர் நடித்திருந்த படையப்பா படம் பெரும் வெற்றிப்பெற்றது. படையப்பா படம் அவரின் கேரியரில் மிக முக்கியப்படமாக கருதப்பட்டது.

இந்நிலையில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் இவர் நடித்த ராஜமாதா சிவகாமி தேவி கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அந்த கதாபாத்திரத்தின் மூலம் பேரும் புகழும் பெற்றார் ரம்யா கிருஷ்ணன். கணவரின் இயக்கத்தில் இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது கணவரின் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15ஆண்டுகளுக்கு பிறகு ஏற்கனவே கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு சந்திரலேகா படத்திலும் 2004ஆம் ஆண்டு ஸ்ரீ ஆஞ்சநேயம் படத்திலும் நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

தற்போது 15 ஆண்டுகள் கழித்து தனது கணவர் இயக்கத்தில் வந்தே மாதரம் என்றபடத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ரம்யா கிருஷ்ணன், 2003ஆம் ஆண்டு தெலுங்கு பட இயக்குநரான கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.