செருப்பால் அடிப்பேன் : பிரபல இயக்குனரை திட்டிய பாடகி : என்ன நடந்தது!!

1059

பிரபல பாடகி பிரணவி தற்போது மீடு புகார் கூறி தெலுங்கு சினிமாவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 2016ல் ரகு மாஸ்டர் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.

ஆரம்பகாலத்தில் சினிமாவில் பாடல் பாட வாய்ப்புகள் தேடிய சமயத்தில் பலர் படுக்கைக்கு வந்தால் தான் பாட வாய்ப்பு என கூறியதாக தெரிவித்துள்ளார். அப்படி நடந்த சம்பவம் ஒன்று பற்றியும் அவர் கூறியுள்ளார்.

பிரபல இயக்குனர் ஒருவர் இவரை ஒரு பாடல் பாட வருமாறு அழைத்துள்ளார். அங்கு ஸ்டூடியோவுக்கு சென்ற பிறகு படுக்கையை பகிர்ந்தால் பாட வாய்ப்பு தருவதாக ஓப்பனாகவே கூறினார்.

“நான் சின்ன பொண்ணு. இப்போது தான் இன்டர் படிப்பை முடித்திருக்கேன்” என கூறினேன். ஆனால் அவர் அதை பற்றிய பேசிக்கொண்டிருந்தார். கோபத்தில் நான் “செருப்பால் அடிப்பேன்” என கூறிவிட்டு கிளம்பி வந்துவிட்டேன் என பிரணவி தெரிவித்துள்ளார்.