எனக்கு விஜய் சேதுபதியுடன் டூயட் பாட ஆசை : ஜோதிகாவின் டூப் சாரா!

968

ஜோதிகாவின் டூப் சாரா

விஜய் சேதுபதியுடன் இணைந்து டூயட் பாட ஆசைப்படுகிறார் சாரா. இவர் ஜோதிகாவிற்கு டூப் ஆக நடித்தவர். சாராவுக்கு சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதற்கு துளியும் விருப்பமில்லையாம். ஒரு காதலியாகவோ அல்லது நேட்டிவிட்டி சார்ந்த திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறார்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்று சொந்தக்காரர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். மு.மாறன் இயக்கத்தில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாரா.

மேலும் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடித்துள்ள அப்பா-மகள் சார்ந்த ஒரு படமான ராஜாவுக்கு செக் திரைப்படத்தில் சிபிசிஐடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தனக்கு காவல் துறை அதிகாரியாகவே நடிக்க வாய்ப்பு வருகிறது என்பதில் அவருக்கு சிறு வருத்தம் உண்டு. ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையே தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா. அவரின் படங்கள் என்றாலே அதில் ஒரு வித்தியாசம் இருக்கும். மிகவும் ஆழமான படைப்புகளை வழங்குவதில் திறமையான இயக்குனர் பாலாவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

அவரின் பல படைப்புகளில் ஒன்று 2018ஆம் ஆண்டு வெளியான பெண்கள் சார்ந்த திரைப்படமான நாச்சியார் திரைப்படம். இப்படத்தில் ஜோதிகா ஒரு கடுமையான காவல்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பல ஃபைட் சீன்கள், சேசிங் சீன்கள், கார் சேசிங் சீன்கள் இருந்தன.

அதில் ஜோதிகாவிற்கு டூப்பாக நடித்தவர் மலேசியாவை சேர்ந்த சாரா சுப்பையா. இயக்குநர் பாலா, சாராவை இப்படத்தில் ஜோதிகாவிற்கு டூப்பாக நடிக்க வைத்ததற்கு முக்கிய கரணங்கள் ஜோதிகாவைப் போன்ற மிக பெரிய கண்கள் மற்றும் நன்றாக கார் ஒட்டக்கூடியவர் என்பதால் என்கிறார் சாரா சுப்பையா. சாரா மலேசியாவில் பிறந்திருந்தாலும் அவரது பூர்வீகம் சிவகங்கை மாவட்டம் தான். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பலர் மலேசியாவில் வசித்துவருகின்றனர்.

சாராவுக்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவர் இயக்குனர் பாலா. பாலா சார் எந்த கதாபாத்திரத்திற்காக தன்னை அழைத்தார் என்பது தெரியாமலேயே அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜோதிகாவை போலவே பிளாக் அண்ட் பிளாக் ட்ரெஸ்ஸில் ஒரு நாள் முழுக்க சேசிங் சீனில் நடித்துள்ளார் சாரா. இருப்பினும் ஜோதிகாவுடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிறார் சாரா சுப்பையா. பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்க சாரா ஆசைப்படுகிறார்.

குறிப்பாக தனது பூர்வீகமான சிவகங்கை மாவட்டம் சார்ந்த கிராமத்து கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார். ஒரு நல்ல இயக்குநரால் நிச்சயம் அவருக்கு தேவைப்படும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு யாரை வேண்டுமானாலும் அவர்களால் எளிதில் மாற்றி விடமுடியும். சாராவிற்கு கவர்ச்சியாக நடிப்பதில் விருப்பமில்லை. ஒரு காதலியாகவோ அல்லது நேட்டிவிட்டி சார்ந்த திரைப்படங்களில் நடிக்க விருப்பம் தெரிவிக்கிறார்.

மேலும் எந்த கதாநாயகருடன் உங்களுக்கு நடிக்க விருப்பம் என்ற கேள்விக்கு, தனது சிவகங்கை மாவட்ட சொந்தபந்தங்கள், சாரா விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றார்.