சிங்கம் 2 படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் கைது : போலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

1051

பிரபல நடிகர் கைது

சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஓஜரா என்ற ஜேசன். நைஜீரியாவை சேர்ந்த இவர் கிங் ஆஃப் மை வில்லேஜ், சூப்பர் ஸ்டோரி என நைஜீரிய படங்களிலும் நடித்துள்ளார்.

தங்கல், ஆக்சிரெண்டல் பிரைம் மினிஸ்டர், கேரி ஆன் கேசார் என சில் ஹிந்தி படத்திலும் நடித்திருக்கிறார். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஜேசன் சுற்றிகொண்டு இருந்தாராம். இதனால் சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.

இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துடன், அவரின் விசா 2011ல் காலாவதியாகி ச ட்டவிரோ தமாக அவர் இங்கு தங்கியருந்ததால் அவரை உடனே போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் உளவுத்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது.