சபரிமலை கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய கூடாது என தடை உள்ளது. அதற்காக பெண்கள் அமைப்புகள் பல போராட்டம் நடத்தியும் வருகின்றன.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தமிழ் சினிமா ஷூட்டிங்குகளில் உள்ள யூனிட் வண்டி, ஜெனரேட்டர் வண்டி போன்றவற்றில் பெண்கள் நுழையக்கூடாது என்று விதி இருப்பதை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? சினிமா ஜெனெரேட்டர் வண்டிக்குள் ஆண்கள் புழங்கலாம், உறங்கலாம், ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட கூடாது …. காரணம் தீட்டாம்!” என கஸ்தூரி ட்விட்டியுள்ளார்.