மிளகாய்யை அந்த உறுப்பில் சொருகி கொள்ளுங்கள் : நெட்டிசன்ஸை மோசமாக விமர்ச்சித்த நடிகை!!

1293

பிரபல தொலைக்காட்சி நடிகையான ரிச்சா சோனி, இஸ்லாமியரான ஜிகர் அலி சம்பானியா என்பவரை பல காலமாக காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி பெங்காளி முறைப்படியும், அதே மாதம் 18ம் தேதி இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்.

ரிச்சாவின் பெற்றோருக்கே அவர் திருமணத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த நெட்டிசன்களோ ரிச்சாவை விலைமாது என்று கேவலமாக திட்டினார்கள். ஒரு முஸ்லிமை திருமணம் செய்தது தவறு என்று ரிச்சாவை பற்றி தரக்குறைவாக பேசினார்கள்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தன்னை திட்டுபவர்களை மிக மோசமாக திட்டி ரிச்சா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சும்மா ஏதோ பெயர்கள், அடையாளத்தை வைத்து என்னை பின்தொடர்பவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. ஆனால் எனக்கு அப்படி இல்லை அது தான் உங்களுக்கு பிரச்சனையாக உள்ளது.

ஒருவரை விலைமாது என்று அழைப்பது, மதத்தை பற்றி பேசுவது உங்களுக்கு எளிது. அது உங்களின் வளர்ப்பை காட்டுகிறது. உங்களின் வெறுப்பை கக்கும் கமெண்டுகளால் நான் வெளியிட விரும்பும் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.