பிக்பாஸ் 3ல் இந்த மூன்று பிரபலங்களா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

1053

விஜய் டிவியில் இன்று பிக்பாஸ் 3-ஐ பற்றிய புரோமோ ஒன்று வெளியானது, பிக்பாஸ் 3 எப்போது வரும் என்று பலரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஆல்யா மானாசா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் விஸ்வாசம், காலா படங்களில் நடித்த ஷாக்‌ஷி அகர்வால் ஆகியோர் பங்குபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

இதைக் கண்ட நெட்டீசன்கள் பலரும், எம்.எஸ் பாஸ்கரை ஒத்துக் கொள்ளலாம், அது ஏன் ஷாக்சி அகர்வால் கூட ஓகே, ஆனால் ஆல்யா மானாசா என்பது தான் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் பிக்பாஸ் பற்றிய அறிவிப்பு வந்துவிட்டதால், இன்னும் சில நாட்களுக்கு இது போன்ற செய்தியைத் தான் பார்க்க முடியும் எனவும், ராஜாராணி என்ற பீக் சீரியலில் இருக்கும் போது, அவர் எப்படியப்பா 100 நாள் கேம் ஷோவில் கலந்து கொள்வார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.