ரஜினி படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்!!

1007

ரஜினி..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தில் பிரபல நடிகர் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

மூன்றுமுகம், பாண்டியன் படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையில் ரிலீசாக உள்ளது.இந்நிலையில், தர்பார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து பிரபல தெலுங்கு நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் தர்பார் படத்தில் நடிக்க மறுத்ததாக அவர் கூறியுள்ளார்.கன்னட படமான அவனே ஸ்ரீமன் நாராயணா அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 27-ந் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.