நீண்ட நாளாக காத்திருந்த அனுஷ்காவுக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்!!

1159

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் பெரும் இடத்தை பிடித்து வைத்திருந்தார். அருந்ததி, பாகுபலி ஆகிய படங்கள் மிக முக்கியமானதாக அமைந்தது. பாகமதி படத்திற்கு பின் அவர் படங்களில் நடிக்கவில்லை. 35 வயதை கடந்துவிட்ட அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.

அதே வேளையில் அவரும் அமெரிக்காவில் உடல் எடை குறைப்பதற்காக யோகா, சிகிச்சைகள் என எடுத்து வந்தார். மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாம். இதற்காக O1 விசாவுக்காக அவர் நீண்ட நாளாக காத்திருந்தார். தற்போது அதற்கான அனுமதி கிடைத்துவிட்டதாம்.

இதனால் அனுஷ்கா விரைவில் ஷூட்டிங்குக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். இப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே என பலர் நடிக்கிறார்கள்.