என்னுடைய பிறப்பை நினைத்து நானே வேதனைப்படுகிறேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ்-தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக் கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாகத் தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையை களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி அதிர்வலையை ஏற்படுத்தினார்.
இதையடுத்து சினிமா வாய்ப்பு தேடி சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் குடியேறிய ஸ்ரீரெட்டி தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்கிறார்.
இருப்பினும் சினிமா வாய்ப்புக்காக ஸ்ரீரெட்டி இப்படி பொய் புகார் கூறுகிறார் என்றும் படுக்கைக்கு சென்று சினிமா வாய்ப்பு பெற என்ன அவசியம்? நீயெல்லாம் நல்ல குடும்பத்து பெண்ணா? என்றும் பலரும் அவரை வசைபாடி ஓய்ந்து விட்டனர்.
இருப்பினும் ஸ்ரீரெட்டியின் இந்த செயல்கள் பொதுவெளியில் இருப்பவர்களை அவரின் குடும்பத்தையே அதிகம் பாதித்து இருக்கும். குறிப்பாக ஸ்ரீ ரெட்டியின் அம்மா இந்த விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீரெட்டி ஒரு உருக்கமான பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘என்னுடைய பிறப்பை நினைத்து நானே வேதனைப்படுகிறேன். என்னை போன்ற ஒரு பெண்ணுக்கு வேறு எந்த தாயும் பிறப்பு கொடுத்திருக்க மாட்டாள்.
என்னை பெற்றது ஒன்றுதான் நீங்கள் செய்த தவறு. அதனால் தான் நான் உங்களுக்கு இப்படி ஒரு கொடூரமான தண்டனையை கொடுத்திருக்கிறேன். எனக்கு தெரியும் நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் நான் உங்களுக்கு தொல்லை கொடுத்துள்ளேன். என்னால் உங்களை பல பேர் தகாத வார்த்தையால் திட்டுகிறார்கள்.
நீங்கள் தினம்தோறும் ஒரு பிணத்தை போல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். என் தவறுக்காக எல்லோரும் உங்களை குற்றம்சாட்டுகிறார்கள். நீங்கள் சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்தது இந்த உடம்பு, என் மூச்சை நீங்களே எடுத்து கொள்ளுங்கள்’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். பதிவிற்கு சிலர் ஆறுதலாகவும் சிலர் எதிர்மறையாகவும் கருத்து கூறி வருகின்றனர்.