சிவகார்த்திகேயனை மீண்டும் சீண்டிய அருண்விஜய் : ரசிகர்கள் கொந்தளிப்பு!!

1066

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படத்திலேயே ‘நீயெல்லாம் மாஸ் காட்ட ஆரம்பிச்சுட்ட்’ என்று சதீஷ் கேட்க, அதற்கு சிவகார்த்திகேயன் ‘என் மேல ரொம்ப காண்டுல இருக்கீங்க போல’ என்று அருண்விஜய் முன்பு பேசியதற்கு பதிலடி கொடுத்தார்.

ஆனால், இன்று அருண்விஜய் டுவிட்டரில் கிண்டல் செய்யும் விதமாக ஒரு ஸ்மைலியை போட்டுள்ளார், இதை பார்த்த எல்லோரும் கண்டிப்பாக இவர் சிவகார்த்திகேயனை தான் சீண்டுகின்றார் என கோபமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அதற்கு அடுத்த டுவிட்டே, என் அடுத்தப்படத்தின் அறிவிப்பை நானே தெரிவிப்பேன், வேறு எதனையும் நம்பாதீர்கள் என டுவிட் செய்துள்ளார், இவர் எதற்கு அந்த ஸ்மைலியை போட்டார் என தற்போது வரை பலருக்கும் தெளிவாக தெரியவில்லை.