நடிகர் கமல் மீது செருப்பு வீசியவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய எச்.ராஜா : பிக்பாஸ் காயத்ரி கண்டனம்!!

1064

நடிகர் கமல்ஹாசன் நேற்று பங்கேற்ற அரசியல் கூட்டத்தில் அவர் மீது செருப்பு, முட்டை ஆகியவை வீசப்பட்டது. கமல் ஹிந்து மதம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது.

கமல் மீது செருப்பு வீசிய நபருக்கு பாஜகவை சேர்ந்த எச்.ராஜா பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார்.

இதற்கு பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். கமலுக்கு தண்டனை சட்டப்படி தான் இருக்கவேண்டும், இப்படி அல்ல! என அவர் மேலும் கூறியுள்ளார்.