எனக்கு விருப்பமே இல்லை : சாமி2 படக்குழு மீது ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சி குற்றச்சாட்டு!!

968

காக்கா முட்டை, வடசென்னை என பல படங்களில் தன் நடிப்பு திறமையை நிரூபித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். விக்ரம்-ஹரி கூட்டணியில் வெளியான சாமி படம் ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை சென்ற வருடம் வெளியிட்டனர். முதல் பாகத்தில் திரிஷா நடித்திருந்த ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

முதலில் த்ரிஷா தான் ஒப்பந்தம் ஆனார், ஆனால் அவர் பின்னர் நடிக்கமுடியாது என கூறி ஒதுங்கிக்கொண்டார். இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படம் பற்றி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசியுள்ளார். “நான் இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை.

ஆனால் விக்ரம்-ஹரி என்னை பர்சனலாக கேட்டுக்கொண்டதால் ஒப்புக்கொண்டேன். வேறு எந்த நடிகையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என அவர்கள் கூறியதும் ஒரு காரணம்” என கூறியுள்ளார்.

சில காட்சிகளில் மட்டுமே வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பை பற்றி இந்த படத்தை பார்த்த பலரும் மோசமாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.