இளம் நடிகரை வெறித்தனமாக அடித்து துன்புறுத்திய போலிஸ்! மருத்துவமனையில் அனுமதி!!

1007

சினிமா பிரபலங்கள் சிலர் சர்ச்சைகளை சந்திப்பதை சகஜமாக கருதுகிறார்கள். ஹிந்தி சினிமா பிரபலங்களுக்கு இது சர்வ சாதாரணம் போல தான். பத்திரிக்கைகளில் அடிக்கடி கிசுகிசுக்களிலும் மாட்டிக்கொண்டு முழிப்பார்கள்.

தற்போது ஹாட்டாப்பிக்கா ஓடிக்கொண்டிருப்பது நடிகர் Aansh Arora பற்றிய செய்தி தான். அண்மையில் இவர் தன் சகோதரர் உடன் போலிசாரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் காயமடைந்த அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மே 13 முதல் 16 வரை மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

விசாரணையில் அவர் உத்தர்பிரதேஷ் காஜியாபாத் இந்திராபுரம் போலிஸ் நிலையத்தில் என்னை துன்புறுத்தினர். முதல் நாள் இரவிலிருந்து மறுநாள் காலை வரை என்னையும் என் மைனர் தம்பியையும் தொந்தரவு போலிசார் செய்தனர் என நடிகர் கூறியுள்ளார்.

எல்லாவற்றிக்கும் காரணம் சாப்பிடும் இடத்தில் ஹோட்டல் ஊழியர்களுக்கு இவருக்கும் நடந்த தகராறு தானாம்.