ஐஸ்வர்யா ராஜேஷை வேட்டையாட துடிக்கும் நடிகர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!!

7004

ஐஸ்வர்யா ராஜேஷை..

தமிழ் சினிமாவிற்கு குறைந்த பட்ஜெட்டில் நல்ல தமிழ் திரைப்படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவராக மாறியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

முண்டாசுபட்டி, ராட்சசன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், அண்மையில் FIR ஆகிய திரைப்படங்கள் விஷ்ணு விஷால் நடிப்பில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் உள்ளதால், அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதன்படி விஷ்ணுவிஷால் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் மோகன்தாஸ்.

இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். முரளி கார்த்திக் என்பவர் இயக்குகியுள்ளார். இந்த படத்தின் டீசரை நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதில் மிகவும் ஆக்ரோஷமாக விஷ்ணுவிஷால் இருக்கிறார். தன்னை ஒரு சிங்கம் என கூறி கொள்கிறார். அதேபோல ஐஸ்வர்யா ராஜேஷை மான் என குறிப்பிடுகிறார். சிங்கம் மானை வேட்டையாட போகிறது என்று டீசரில் கூறியிருக்கார்.

படம் உண்மைச் சம்பவமாக இருக்கலாம் என்கிற வாசகத்துடன் உள்ளது. டீசரில் ரசிகர்களை ஈர்த்தது போல படமும் ரசிகர்களை திருப்திபடுத்தினால் விஷ்ணு விஷாலுக்கு மற்றுமொரு நல்ல ஹிட் கிடைத்துவிடும்.